வெள்ளி, 1 ஜனவரி, 2010
ninaithen solhiren
இன்றைய தினத்தில் நான் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி எனது முதல் பதிவை பதிவு செயஹிறேன். காலம் எவ்வளவு மாற்றங்களை அடைதின்ருக்கிறது என்பதை யோசித்துபார்த்தால் பிரமிப்பஹா இருக்கீறது. சற்றொப்ப ௧௫ ஆண்டுஹளுக்கு முன்னர் கூட இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் அவ்வளவு பிரபலம் இல்லை. இருக்கட்டும் . பழயன கழிதலும் புதியன புகுதலும் வழுவில கால வாஹையினனே என்ற நன்னுளின் விதிப்படி மாற்றங்களை ஏற்றுகொள்வோம் . ஏனெனில் மாற்றம் ஒன்றுதான் உலஹில் மாறாத ஒன்று. சரி இன்றைய புத்தாண்டு தினத்தில் ஒன்று யோசித்தேன். இந்த பத்திரிகைஹளில் ஏன் நல்ல விஷயங்கள் இருட்டடிப்பு செய்யப்படுஹின்றன. உதாரனமாய் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமுக விரோத செயல்ஹால் அல்லது சமுஹத்தல் குற்றம் என ஒதுக்கப்பட்ட விஷயங்கள் மட்டுமே இடம் பெருஹின்றன. அஹ்தன்ரி நல்ல விஷயம் என்பவை இருக்கவே இருக்காது. அல்லது எங்காவது ஒரு மூலையில் நன்கு வரியில் இருக்கும். பத்திரிகையாளரை கேட்டல் மக்கள் அதைத்தான் விரும்புஹிரர்ஹல் என்பார்ஹள். மக்கள் யாரும் இவர்ஹளிடம் சென்று இதைத்தான் போட வேண்டும் என்று வேண்டுகோள் விடுபதில்லை. ஆனால் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுயருபது உண்மை என்பதை ஒப்புகொள்ளும் அதே நேரத்தில் அந்த மாற்றத்தை விரைவு படுத்தும் முகமாய் பத்திரிகைஹளும் அதனை தூண்டுவதஹவே நான் நினைக்கிறேன் . நீங்கள் என்ன நினைக்கிறீர்ஹள் இதை பற்றி?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக